
முசலி - வெள்ளிமலை அல் மத்ரஸதுல் ஹூதா குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கு LUDF அமைப்பின் மூலமாக கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (07) இடம்பெற்றது.
YMMA வின் மன்னார் மாவட்ட பெருப்பாளர் அஹமட் சபீர் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க , LUDF அமைப்பின் தலைவர் வைத்தியர் கலாநிதி ஹரீஸ்தீன் அவர்களின் அனுசரனையில் மக்கியா முஸம்மில் அவர்களின் மேற்பார்வையின் கீழ் 60க்கு மேற்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு குர்ஆன் மத்ரஸா கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
$ads={2}
இந்நிகழ்வில் சமுர்த்தி உத்தியோகத்தர் பௌசி, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் அன்டன் டெரன்ஸ், முசலி பிரதேச சபை உறுப்பினர் A.R.M ரஸ்மின், பள்ளி நிர்வாக சபை உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், மௌலவிமார்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



