கண்டி - ஸ்ரீ தலதா மாளிகையின் சுவர் இடிந்து விழுந்தது!

கண்டி - ஸ்ரீ தலதா மாளிகையின் சுவர் இடிந்து விழுந்தது!


கண்டியில் பெய்த கடும் மழையுடனான வானிலையை அடுத்து ஸ்ரீ தலதா மாளிகையில் சுவர் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.


தலதா மாளிகையின் ஸ்ரீ விஷ்ணு தேவஸ்தானத்திற்கு அருகிலுள்ள சுமார் 100 மீற்றர் நீளமான சுவரொன்றே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


$ads={2}


மேலும் இந்த இடத்திலுள்ள மற்றுமொரு பாதுகாப்பு சுவர் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் திலங்க தேலவிடம் வினவியபோது, சம்பவம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட பொறுப்பு கூற வேண்டிய தரப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இந்த சுவரை விரைவில் புனர் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தான் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post