இரத்தினபுரி - பலாங்கொடை நகரில் 05 பள்ளிவாயல்கள் பூட்டு!

இரத்தினபுரி - பலாங்கொடை நகரில் 05 பள்ளிவாயல்கள் பூட்டு!


இரத்தினபுரி - பலாங்கொடை நகர் எல்லைக்குள் அமைந்துள்ள 05 பள்ளிவாசல்களை மறு அறிவித்தல் வரை பூட்டுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


பலாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று (07) இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.


பலாங்கொடை நகரிலுள்ள 02 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே, சுகாதார பிரிவினர் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளனர்.


ஒன்றரை வயதான குழந்தையொன்றும், 62 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இவர்களுடன் நெருங்கி பழகிய 15 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


குறித்த நபர்களுக்கு PCR பரிசோதனைகள் நடத்தப்படும் வரை, பலாங்கொடை நகர் எல்லைக்குள் உள்ள 05 முஸ்லீம் பள்ளிவாசல்களை மூடுவதற்கு பலாங்கொடை கொரோனா தடுப்பு குழு தீர்மானித்துள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post