
நாட்டு சனத்தொகையில் 75% கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவென நிலையான வேலைத் திட்டம் அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதன்போது சட்டத்திட்டங்களில் தங்கி இருக்காது மக்கள் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு அரச ஊழியர்கள் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
அலரிமாளிகையில் இடம்பெற்ற அரச ஊழியர்களுக்கான நிகழ்வில் ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
$ads={2}
உள்நாட்டு உற்பத்தியின் மூலம் வௌிநாடுகளுக்குச் செல்லும் பணத்தை உள்நாட்டு விவசாயிகளுக்கு செல்லும் வகையில் திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் அரச ஊழியர்கள் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனவே அலுவலகங்களில் இருக்காது நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தேடிச் சென்று தீர்வு வழங்க அரச ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.