சஜித்தை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு!

சஜித்தை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு!


எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.


எதிர்கட்சி தலைவரை இன்று (06) சந்தித்த வேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.


$ads={2}


எதிர்கட்சி தலைவரும் இந்திய வெளிவிவகார அமைச்சரும் இரு தரப்பு உறவுகள் குறித்தும் இரு நாடுகளிடையேயான நீண்டகால வரலாற்று தொடர்புகள் குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.


இலங்கையில் வீடமைப்பு திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்தியா வழங்கிய உதவிகளிற்கு சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்துள்ளார்.


இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை வீடமைப்பு திட்டத்திற்கு சூட்டியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள எதிர்கட்சி தலைவர் சுவசெரிய அம்புலன்ஸ் சேவைக்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.


இந்திய வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post