பேஸ்புக் பதிவு காரணமாக கைதான தமிழ் ஊடகவியலாளரை விடுவிக்க RSF அமைப்பு கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேஸ்புக் பதிவு காரணமாக கைதான தமிழ் ஊடகவியலாளரை விடுவிக்க RSF அமைப்பு கோரிக்கை!

பேஸ்புக் பதிவுக்காகக் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு பாரிஸை தளமாகக் கொண்ட ‘எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு’ (Reporters Without Borders – RSF) இலங்கை அரசிடம் கேட்டிருக்கிறது. 

மட்டக்களப்பைச் சேர்ந்த சுயாதீனப் பத்திரிகையாளர் முருகுப்பிள்ளை கோகுலதாசன் என்பவரையே விடுதலை செய்யுமாறு கோரி RSF அமைப்பு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

$ads={2}

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

ஜனவரி 16 ஆம் திகதி ஐம்பதாவது நாளை சிறையில் நிறைவு செய்யும் முருகுப்பிள்ளை கோகுலதாசன் கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒரு முகநூல் பதிவுக்காக ரகசியமான முறையில் கைது செய்யப்பட்டார். 

இச்சட்டம் பெரும்பாலும் பத்திரிகையாளர்களை மௌனிக்கச் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்ற கடுமையான சட்டம்; 2009 இல் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களது படங்களை முகநூலில் வெளியிட்டதாகவே அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் வேறு வட்டாரங்கள் ஊடாக எமக்குத் தனித்தனியே கிடைத்த ஆதாரங்களின்படி அவர் ஆண்டு தோறும் நவம்பர் மாதங்களில் உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட சிறுபான்மைத் தமிழர்களை நினைவுகூருகின்ற நிகழ்வு தொடர்பான ஒரு பதிவையே வெளியிட்டிருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.

“முருகுப்பிள்ளை கோகுலதாசனின் கைதும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அவரைத் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பதும் ஊடக சுதந்திரத்தின் மீதான மீறல் என்பதை வெளிப்படையாகக் காட்டுகின்றன” என்று RSF அமைப்பின் ஆசிய பசுபிக் பிரிவின் பொறுப்பாளர் டானியல் பஸ்ராட் (Daniel Bastard) தெரிவித்திருக்கிறார். 

கோகுலதாசனை உடனடியாக நிபந்தனை ஏதும் இன்றி விடுவிக்க உத்தரவிடுமாறு இலங்கையின் சட்டமாஅதிபரைக் கேட்டுக் கொள்கின்றோம். தமிழர் பிரச்சினையை நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளிப்படுத்துகின்ற ஊடகவியலாளர்களைப் பாதுகாப்புப் படைகள் துன்புறுத்துவது நிறுத்தப்பட வேண்டும். 

வெளிநாட்டுகளில் தமிழ் புலிகளிடம் இருந்து பணம் பெற்றனர் என்று தெரிவித்து ஓராண்டுக்கு முன் மட்டக்களப்பில் ஏழு ஊடகவியலாளர்களது தகவல்கள் வட்டமிடப்பட்ட அவர்களது தலைகளின் படங்களுடன் துண்டுப் பிரசுரமாக வெளியிடப்பட்டன. அது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் செய்த முறைப்பாட்டைப் பதிவு செய்வதற்கோ அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கோ பொலீஸார் மறுத்து விட்டனர் என்று RSF தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.