தமிழ் பேசும் மக்கள் வாழ்வில் சமாதானம் நிறைந்த ஆண்டாக பரிணமிக்கட்டும்! முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!

தமிழ் பேசும் மக்கள் வாழ்வில் சமாதானம் நிறைந்த ஆண்டாக பரிணமிக்கட்டும்! முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!


மலர்ந்துள்ள 2021 தைப்பொங்கல் புத்தாண்டு, சமாதானம் செளபாக்கியம் நிறைந்த ஆண்டாக, இலங்கை வாழ் தமிழ் மக்களின் வாழ்வில்  பரிணமிக்கப் பிரார்த்திப்பதாகவென, முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைஸர் முஸ்தபா, தனது தைப்பொங்கல் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


 அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,


கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக,  மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கும் நிலையில், மலர்ந்துள்ள தைப்பொங்கல் புத்தாண்டில் அப்பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி, அம்மக்கள் வாழ்வியலில் ஆரோக்கியச் சூழ்நிலையும் நிம்மதியும் சந்தோஷமும்  ஏற்பட வேண்டும் என்றும்  பிரார்த்திக்கின்றேன்.


தமிழ் பேசும் மக்களுடைய உரிமைகள் பலதும், கடந்த காலங்களில் மறுதலிக்கப்பட்டிருந்தன. இவைகள் அனைத்தும் மறுக்கப்படாமல், மறைக்கப்படாமல் மீண்டும் அம்மக்களுக்குக் கிடைக்கப்பெற வேண்டும். 


$ads={2}


கடந்த காலங்களில், தமிழ் பேசும் மக்களின் பிரதான சில உரிமைகளுக்காக வேண்டி பாராளுமன்றில் குரல் எழுப்பினோம். இவ்வாறான உரிமைகள் நீதியானதாகவும், நேர்மையானதாகவும், பாதுகாப்பானதாகவும் கிடைக்க வேண்டும் என்று, நீதிமன்றிலும் கூட வாதிட்டோம்.


எனவே, எமது விடுபட்டுப்போன அல்லது மறுதலிக்கப்பட்ட உரிமைகள் மீளவும் கிடைக்கப்பெற  வேண்டும் என, தைப்பொங்கள் திருநாளில் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம். 


இதேவேளை, மலர்ந்துள்ள தைப்பொங்கல்  புத்தாண்டு, தமிழ் உறவுகளது  வாழ்வில்  மிகச்சிறந்த ஆண்டாக சுடர் விட்டுப் பிரகாசிக்கவும் பிரார்த்திப்போம். 


இலங்கை வாழ்  அனைத்து இன மக்களும் நிம்மதி, சந்தோஷம், அமைதியாக வாழவும், வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையாக வாழவும் இத்தருணத்தில்  பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன். 


-ஐ. ஏ. காதிர் கான்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post