இனி தேசிய விளையாட்டு வீரர்களுக்கு performance அடிப்படையில் சம்பளம்!

இனி தேசிய விளையாட்டு வீரர்களுக்கு performance அடிப்படையில் சம்பளம்!


முதல் தடவையாக தேசிய விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் செயல்திறன் அடிப்படையில் சம்பளம் செலுத்தும் கட்டமைப்பைக் கொண்டு தொழில்முறை அடிப்படையில் கையெழுத்திட்டு ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.


கொழும்பில் இன்று புதிய தேசிய உயர் செயல்திறன் உத்தி மற்றும் விளையாட்டு அடுக்கு முறையை அறிமுகப்படுத்தும் நிகழ்வின் போது இதனை தெரிவித்தார்.


மேலும், ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு 50 மில்லியன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேநேரம், அசந்த டி மெல் இலங்கை கிரிக்கெட்டின் தலைமை தேர்வாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post