நாடாளுமன்றில் வாராந்தம் PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை?

நாடாளுமன்றில் வாராந்தம் PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை?


நாடாளுமன்றத்தில் எழுமாறாக முன்னெடுக்கப்படவுள்ள PCR பரிசோதனைகளில் பங்கேற்குமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியுடன் வாரத்துக்கு ஒரு தடவை குறித்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவத்துள்ளார்


இதேவேளை நாடாளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட கடந்த 13 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட PCR பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.


நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post