தனது 13 வயது சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் கைது! மட்டக்களப்பில் சம்பவம்!

தனது 13 வயது சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் கைது! மட்டக்களப்பில் சம்பவம்!


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிலுள்ள பிரதேசம் ஒன்றில் 13 வயதான தனது சொந்த மகளை பாலியில் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சந்தேகத்தில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.


இதனையடுத்து அவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் உத்தரவிட்டார்.


சம்பவதினமான புதன்கிழமை மதுபோதையில் காணப்பட்ட சந்தேன நபர் தனது 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமி தாயாரிடம் தெரிவித்ததையடுத்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.


இதனையடுத்து பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


தகவல் - கனகராசா சரவணன்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post