எதிர்வரும் 36 மணித்தியாலத்திற்கு நாட்டில் நிலவும் காலநிலை தொடர்பான அறிவித்தல்!

எதிர்வரும் 36 மணித்தியாலத்திற்கு நாட்டில் நிலவும் காலநிலை தொடர்பான அறிவித்தல்!


எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.


இதற்கமைய, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இவ்வாறு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


அதேபோன்று, கிழக்கு மாகாணத்தின் சில பாகங்களிலும், முல்லைதீவு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் சில பாகங்களிலும் நாளை காலை வேளையில் அதிகளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post