ISOLATION RELAXED : தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த பிரதான நகரமொன்று இன்று விடுவிக்கப்பட்டது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ISOLATION RELAXED : தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த பிரதான நகரமொன்று இன்று விடுவிக்கப்பட்டது!!

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், இன்று (25) தளர்த்தப்பட்டுள்ளது.

வவுனியா- பட்டாணிசூரை சேர்ந்த கர்பிணி பெண் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த கிராமம் முடக்கப்பட்டது.


$ads={2}

மேலும் வவுனியா நகரப் பகுதியில் தொற்றாளர்கள் அதிகரித்துவந்த நிலையில், பிரதான நகரம் உட்பட்ட 19 கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்டு, முடக்கப்பட்ட நிலையில் கடந்த 18ம் திகதி வவுனியா நகர மத்தி தவிர்ந்த ஏனைய பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்றைய தினம் மில் வீதி தவிர்ந்த ஏனைய பகுதிகள் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், வவுனியா மொத்த வியாபார நிலையம் மூடப்பட்டுள்ளது.

மேலும், வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் அன்டிஜன் பரிசோதனை செய்யப்படாத பெருமளவான வர்த்தக நிலையங்கள், சுகாதார பரிசோதகர்களினால் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.