
கேகாலையை சேர்ந்த தம்மிக்க பெரேரா தயாரித்த கொரோனா நோயை தடுக்கும் பாணி தற்பொழுது eBay ஒன்லைன் விற்பனை தளத்தில் விற்பனைக்காக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பாணியின் இரண்டு இடுகைகள் காணப்படும் நிலையில், ஒன்று 250 அமெரிக்க டாலருக்கும் மற்றொன்று 399.98 அமெரிக்க டாலருக்கும் விற்பனைக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
$ads={2}
விளம்பரத்தின் சுருக்கமான விளக்கத்தைக் கூறுகின்றன விவரக்கோவையில் பாணி பற்றிய தகவல்களும் அடங்குகின்றன. மேலும் இது இலங்கையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார அதிகாரிகள் அதை விற்பனைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெடெக்ஸ் அல்லது டி.ஹெச்.எல் நிறுவனத்தால் 30 நாள் ரிட்டர்ன் பாலிசியுடன் டெலிவரி செய்யப்படும் என்று அது மேலும் கூறுகிறது.

