
புதிய வகை வைரஸ் தொற்றுப் பரவல் குறித்து இலங்கை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் பிற நாடுகளில் ஏற்பட்டுள்ள நிபா எனப்படும் புதிய வைரஸ் தொற்றுக் குறித்தும் சுகாதார அமைச்சு விசேட அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
$ads={2}
இருப்பினும், புதிய வைரஸ் தொற்றுப் பரவல் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பிலிருந்து எந்த பரிந்துரையும் இதுவரை கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நிபா வைரஸ் உட்பட பிராந்தியத்தில் பரவும் பிற வைரஸ்களை சுகாதார அமைச்சு கண்காணித்து வருவதாகவும் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த நிபா வைரஸ் வௌவாலில் இருந்து பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அதன் பாதிப்பு அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிபா வைரஸ் மனிதர்களிலும் பிற விலங்குகளிலும் தொற்று மூலம் பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன், அதிக இறப்பு விகிதத்தையும் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.