
இணையதளம் ஊடாக வாடிக்கையாளர்களை தேடிப்பிடித்து விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் 235 யுவதிகள் மற்றும் பெண்களை கைது செய்ய விசேட நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.டப்ளியூ. புஷ்பகுமாரவின் ஆலோசனைக்கு அமைய மேல் மாகாண உளவுப் பிரிவினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
$ads={2}
இதன்படி, இதுவரையில், குறித்த நடவடிக்கையில் விபசார நடவடிக்கையில் ஈடுபட்ட 20 வரையிலான பெண்கள் மற்றும் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண உளவுப்பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜே.ஆர். லக்க்ஷமன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா நிலைமை ஏற்பட்டதன் பின்னர் பரவலாக பாடசாலை மாணவர்கள் என அனைவரும் இணையத்தளத்தை பயன்படுத்த ஆரம்பித்த நிலையில், விபச்சார நடவடிக்கையில் ஈடுபடும் குறித்த பெண்கள், இணையத்தளம் ஒன்றின் ஊடாக வாடிக்கையாளர்களை அணுகுவது கண்டறியப்பட்டுள்ளது.
அவ்வாறு வாடிக்கையாளர்களை அணுகி அவர்களை அழைத்துச் செல்லும் 15 தங்கு விடுதிகள் தொடர்பிலும் மேல் மாகாண உளவுத்துறை தகவல் சேகரித்துள்ள நிலையில், அவசியம் ஏற்பட்டால் அவற்றையும் சுற்றிவளைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
-எம்.எப்.எம்.பஸீர்