க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் கோரிக்கை!

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் கோரிக்கை!


கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கற்பிக்கும் ஆசிரியர்கள் மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையில் தம்மை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.


அத்துடன், மேல் மாகாணத்தில் பாடசாலைகள் பகுதியளவில் திறக்கப்பட்டுள்ள போதிலும், மாணவர்கள் தமக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் வகுப்புகளில் பங்குபற்றி கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இதற்கான அனுமதியை வலயக் கல்வி பணிப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய இடையூறுகளைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post