
கொரோனா தவிர்ப்பு மையக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களின்படி கடந்த திங்கட்கிழமை முதல் இன்று வரை பலசரக்குக் கடைகள், புத்தக நிலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையம், மருந்தகங்கள், சிகையலங்கார நிலையங்கள், அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்படுதல் வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
$ads={2}
அரசாங்க இலட்சினையுடன் கடைகளில் ஒட்டப்பட்டுள்ள அந்த அறிவித்தலில் தனிமைப்படுத்தப்பட்ட வர்த்தக நிலையம் கண்காணிக்கப்படுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இங்கு வெளியாட்கள் எவரும் உட்செல்ல வேண்டாம். குறிப்பாக நேற்று முன் தினம் தொடக்கம் எதிர்வரும் 25.01.2021 வரையான பகுதியினுள் வழங்கப்பட்ட அறிவுரைகளை மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவீர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏறாவூர் என்றும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஏறாவூரில் 6 புடவைக் கடைகளுக்கும் ஒரு புத்தக நிலையத்திற்கும் அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
