அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனியவின் இல்லத்தில் விருந்தில் பங்கேற்ற நபருக்கு கொரோனா தொற்றுக்கு - குறித்த தொற்றாளருடன் பலர் தொடர்பில்!

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனியவின் இல்லத்தில் விருந்தில் பங்கேற்ற நபருக்கு கொரோனா தொற்றுக்கு - குறித்த தொற்றாளருடன் பலர் தொடர்பில்!


அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனியவின் இல்லத்தில் நடைபெற்ற தனியார் விருந்தில் பங்கேற்ற மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார். 

டாக்டர் அனுருத்த பாதெனியவின் நெருங்கிய மூன்று குடும்பங்களின் சுமார் 20 உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் இவ்விருந்துபசாரத்தில் பங்கேற்றுள்ளனர்.

குறித்த விருந்துபசாரம் கடந்த 8 ஆம் திகதி நடைபெற்றதோடு, குறித்த தொற்றாளர் மினுவன்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.


$ads={2}


குறித்த மருத்துவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதும் விருந்தில் பங்கேற்ற அனைவரையும் தனிமைப்படுத்துமாறு மினுவன்கொடை பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் அனுஜா பெர்னாண்டோ அறிவுறுத்தியுள்ளார்.

தொற்றுக்குள்ளான மருத்துவர் அவிசாவெல்ல ஆதார மருத்துவமனையில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10 ஆம் திகதி திருமண வைபவமொன்றிலும் குறித்த மருத்துவர் கலந்து கொண்டுள்ளார்.

தற்போது IDH தேசிய தொற்று நோய்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், வைபவம் நடந்த பகுதிக்கு பொறுப்பான மூன்று பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று இரவு 7.45 மணியளவில் டாக்டர் அனுருத்த பாதெனியவின் வீட்டிற்கு வந்து அவரை தனிமைப்படுத்த முயன்ற போது பயனளிக்கவில்லை. மருத்துவர் அனுருத்த பாதெனிய தனது வீட்டு கேட் இனை திறக்காமல், வீட்டிலுள்ள மின்சாரத்தை அணைத்துள்ளார்.

இதனால், பொது சுகாதார ஆய்வாளர்கள் களனியா பிராந்திய சுகாதார அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் இன்று (14) காலை சென்று தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

- அருண செய்தித்தாள்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post