பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘பெரல் சங்க’ பேலியகொடவில் வைத்து கைது!

பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘பெரல் சங்க’ பேலியகொடவில் வைத்து கைது!


பாதாள உலகக் குழு உறுப்பினரான ஹேரத் முதியங்சலாகே பிரபாத் மதுசங்க எனும் ‘பெரல் சங்க’ பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


பேலியகொட, கெமுனு மாவத்தையில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினார்.


$ads={2}


பெரல் சங்கவை கைது செய்யும்போது அவரிடமிருந்து 4 கிராம் 130 மில்லி கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


ஆயுதங்களை காண்பித்து அச்சுறுத்தியமை, போதைப்பொருள் விநியோகம், கப்பம் கோரல், கொள்ளை மற்றும் கொலை போன்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பில் பெரல் சங்க மீது குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையிலேயே நேற்று (20) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்நிலையில் கைது செய்யப்பட்ட அவரை பேலியகொட பொலிஸார், புதுக்கடை 5 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்த நிலையில், அவரை எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post