தொழில் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கை!

தொழில் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கை!

கொழும்பு, நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள தொழிலாளர் செயலகத்திற்கு வருகைதருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்குத் தொழில் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பிரபா சந்திரகீர்த்தி பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத் துள்ளார்.


$ads={2}

ஊழியர் சேமலாப நிதியத்தின் பிரதிபலன்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும், அதற்கான விண்ணப் பப்படிவங்களை ஒப்படைப்பதற்காகவும் கொழும்பு நாரஹென்பிட்டி தொழிலாளர் செயலகத்திற்கு வரு வதைத் தவிர்ந்துகொள்ளுமாறு தொழில் ஆணையாளர் நாயகம் பொதுமக்களைக் கேட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக் காரணமாகக் கூடுதலான மக் களைப் பிரதான அலுவலகத்திற்கு வருவதைத் தடுக்கும் நோக்கமாக ஊழியர் சேமலாப நிதியத்தின் கொடுப் பனவுகளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக் கைகளையும் நாடு பூராகவும் உள்ள மாவட்ட மற்றும் வலய அலுவலகங்களில் மேற்கொள்ள ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரி வித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post