தனது பாணியை அருந்திய பின்னும் கொரோனா ஏற்படுவது ஏன்? விளக்குகின்றார் தம்மிக்க!

தனது பாணியை அருந்திய பின்னும் கொரோனா ஏற்படுவது ஏன்? விளக்குகின்றார் தம்மிக்க!


தனது கொரோனா பாணியை அருந்தியவர்களுக்கு ஏன் தொற்று ஏற்படுகிறது என்பதை  கேகாலையை சேர்ந்த தம்மிக்க பண்டார விளக்கியுள்ளார்.


பாணியை அருந்திய பின்னர் இறைச்சி, மீன், சாப்பிட்டு அல்லது புகைபிடித்து, மதுபானம் அருந்தியிருந்தால் பாணியின் செயல்திறன் குறைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.


தனது முகநூல் பதிவிலேயே அவர் மேற்கண்ட விளக்கத்தை தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க மீன், இறைச்சி, மதுபானம் மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தியதாக பண்டார தெரிவித்துள்ளார்.


இதேவேளை குறித்த பாணியை அருந்திய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இறுதியாக கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post