இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 280 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 280 ஆக உயர்வு!


இன்றைய தினம் புதிதாக மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி கொரோனா தொற்றினால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது.


கல்கிசை பிரதேசத்தைச் சேர்ந்த, 69 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (22) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொரோனா நியூமோனியா மற்றும் சிறுநீரக தொற்று, என அறிவிக்கப்பட்டுள்ளது.


ரணால பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (22) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் சிறுநீரக நோய் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேநேரம் இன்றைய தினம் புதிதாக 724 பேர் கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்விளைவாக நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 57,587 ஆக அதிகரித்துள்ளது.


மேலும் இதுவரை 49,261 பேர்  தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post