கொரொனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி சடங்குகள் தொடர்பாக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி, நாட்டு மக்களின் மத நம்பிக்கை மற்றும் கலாச்சார மரபுகளுக்கு இடமளிக்குமாறு இலங்கை அதிகாரிகளை அமெரிக்க வெளியுறவுத்துறை வலியுறுத்தியது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகம் டுவிட்டர் தளத்தினூடாக இலங்கை அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.