
இதன்படி, இன்று முதல் எதிர்வரும் நான்காம் திகதி வரை, DRONE கருவிகள், காத்தாடிகள் மற்றும் பலூன் என்பவற்றை வானில் பறக்கவிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்திகை நடவடிக்கைகளின் நிமித்தம், விமானங்கள் குறுகிய உயரத்தில் பயணிக்கவுள்ள நிலையில், DRONE மற்றும் காத்தாடி என்பவற்றை பறக்கவிடுவதின் ஊடாக தடைகள் ஏற்படலாம் என விமானப்படை தெரிவிக்கின்றது.
இந்நிலையிலேயே, இன்று முதல் எதிர்வரும் நான்காம் திகதி வரை, அவ்வாறான நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று முதல் பெப்ரவரி 04ஆம் திகதி வரை சுதந்திர சதுக்கத்தை சுற்றிய பகுதிகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், ஒத்திகை நாட்களில் காலை 06.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரையும், சுதந்திர தினத்தன்று அதிகாலை 04.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரையும் இவ்வாறு போக்குவரத்து தடைசெய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஒத்திகைகளின் நிமித்தம், தாமரைத் தடாகத்திற்கு அருகே உள்ள வீதியின் ஒரு பகுதியும் போக்குவரத்துக்காக மூடப்படவுள்ளது.
இதன்படி, இந்த காலகட்டத்தில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.