மானுட நல்லிணக்கத்திற்கு வழிகாட்டும் ஆண்டாக தைத் திருநாள் மலரட்டும்! மொஹமட் உவைஸ் மொஹமட் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மானுட நல்லிணக்கத்திற்கு வழிகாட்டும் ஆண்டாக தைத் திருநாள் மலரட்டும்! மொஹமட் உவைஸ் மொஹமட் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!


இன்று தைப்பொங்கல் திருநாளை வரவேற்றுக் கொண்டாடும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும், எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைகின்றேன். விடைபெறும் ஆண்டு, விட்டுச் செல்லும் தடங்களில் பல துயரங்கள் நம் வாழ்வில் நிரம்பிக் கிடக்கின்றன. இத்துயரங்கள் யாவும் நீங்கி, பிறக்கும் தீபத் திருநாள் வருடத்தில், சிறக்கும் வாழ்வை யாவருக்கும் தொடட்டும் என மனதார வாழ்த்துகின்றேன்.


$ads={2}


இவ்வாறு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான மொஹமட் உவைஸ் மொஹமட், தனது தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


மலர்ந்துள்ள தைப்பொங்கல், இலங்கை வாழ் தமிழ் மக்களின் வாழ்வில் சமாதானம், செளபாக்கியம், சுபீட்சம் நிறைந்த ஆண்டாகத் திகழ வேண்டும். மானுட நல்லிணக்கத்திற்கு வழி காட்டும் புது வருடமாகவும் அமைய வேண்டும். அத்துடன், இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன்  "நாம் இலங்கையர்" எனும் உணர்வுடன் வாழ்வதற்கான சுபீட்சம் மிக்க ஆண்டாக மலர வேண்டும்.    இத்திருநாளிலிருந்து குரோதங்கள், மனக்கசப்புக்கள் மற்றும் கடந்த கால நிகழ்வுகள் அனைத்தையும் களைந்தெறிந்து, இன்றைய திருநாளைக் கொண்டாடுவதே, நாம் புரியும் மிகப் பெரும் நன்மையான கைங்கரியமாகும். 


உலகமெல்லாம் தலை விரித்துத் தாண்டவமாடும் கொரோனா உடைய தாக்கம் எம்மை விட்டும் இன்னும் இன்றும் அகலாத நிலையில், 2020 ஆம் ஆண்டு எம்மை விட்டும் பிரிந்து சென்று, 2021 ஆம் ஆண்டு எம்மத்தியில் மலர்ந்து நிற்கின்றது. இத்தருணத்தில், மனித குலம் இன்று வேண்டி நிற்கும் அன்பு, கருணை, மனித நேயம், சுகாதார வாழ்வு உள்ளிட்ட பாக்கியங்களை, முழு மனித சமுதாயமும் அனுபவித்திட, எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி நிற்கின்றேன். 


"எமது நாடு சுபீட்சம் அடைய வேண்டும். தேசிய சக வாழ்வு, எல்லா மக்களிடமும் உருவாக வேண்டும்" என்ற நல்லெண்ணம் எம்மிடையே வரவேண்டும். 


தமிழ் பேசும் உறவுகள் அனைவருக்கும் சந்தோஷம், சமாதானம், செளபாக்கியம் மிகுந்த ஆண்டாக மலர வேண்டும் என வாழ்த்துகின்றேன்.


-ஐ. ஏ. காதிர் கான்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.