
நாட்டில் கொரோனா தொற்று இரண்டாம் அலை ஏற்பட்டதன் காரணமாக அலுவலக ரயில் சேவைகள் தவிர்ந்த ஏனைய ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
எனினும், தற்போது நாட்டின் இயல்பு நிலை ஓரளவு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று முதல் பதுளை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, மாத்தறை மற்றும் பெலியத்த ஆகிய வெளி மாவட்டங்களுக்கிடையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
அத்துடன், குறித்த ரயில் சேவைகள் தவிர்ந்த ஏனைய ரயில் சேவைகள் அனைத்தும் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிமாவட்ட ரயில் சேவைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட பிரதான ரயில் நிலைய அதிபர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.