
இந்திய பிரபல தமிழ் தொலைக்காட்ச்சியான விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்தளிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 04ஆவது அத்தியாயம் கடந்த ஒக்டோபர் 04ஆம் திகதி முதல் 106 நாட்களாக ஒளிபரப்பாகி வந்தது.
இந்நிலையில், இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியிருந்தவர்களில் முதலில் சோம் வெளியேறினார். அடுத்து ரம்யா வெளியேறினார்.
இறுதி மூவராக ரியோ ராஜ், ஆரி அர்ஜுனன் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் எஞ்சியிருந்தனர்.
பின்னர் ரியோ ராஜ் வெளியேறினார். அதாவது அவருக்கு 03 ஆவது இடம் கிடைத்தது.
இறுதியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று ஆரியும் பாலாஜியும் கமல் ஹாசனால் மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களில் ஆரி அர்ஜுனன் முதலிடம் பெற்றார்.
இதன்போது, ஆரி அர்ஜுனனுக்கு 16 கோடி 50 இலட்சம் வாக்குகளும் பாலாஜிக்கு 6 கோடி 16 இலட்சம் வாக்குகளும் கிடைத்துள்ளதாக கமல் ஹாசன் தெரிவித்தார்.
பிக்பாஸ் 04 வெற்றியாளரான ஆரி அர்ஜுனனுக்கு 50 இலட்சம் இந்திய ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏற்கெனவே வெளியேறியிருந்த ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், ரமேஷ், நிஷா, அர்ச்சனா, அனிதா, ஆஜித், ஷிவாணி, கெப்ரியெலா ஆகிய அனைவரும் இறுதி நிகழ்வில் பங்குபற்றினர்.