
வெளிநாட்டில் சிக்கியுள்ள தனது மனைவியை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி கம்பஹா - உடுகம்பொல பகுதியில் உள்ள 216 அடி உயரத்திலான தொலைபேசி கோபுரத்தின் மீதேறி முன்னெடுத்துவந்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு - பிடிபன பகுதியை சேர்ந்த குறித்த நபர் ஜோர்தான் நாட்டில் சிக்கியிருக்கும் தனது மனைவியை மீட்பதற்காக கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் இந்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
$ads={2}
தொழில் வாய்ப்புக்கான சென்றிருந்த தனது மனைவி ஜோர்தானில் கடந்த 09 மாத காலப்பகுதி சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து அவரை மீட்பதற்காக வெளிநாட்டு அமைச்சுக்கு முறைப்பாடளிக்க சென்ற போது அங்கிருந்த அதிகாரி ஒருவர் தம்மிடம் 4 இலட்சம் ரூபா கோரியதாக தெரிவித்தே இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டதாக அறிவித்துள்ளார்.
இந்தவிடயம் தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக காவற்துறை ஊடகவியலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் வழங்கிய உறுதிமொழியை அடுத்து அவர் இந்த உண்ணாவிரதத்தை இன்று (17) மதியத்துடன் கைவிட்டதாக தெரிய வந்துள்ளது.