முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை - அனைவருக்குமான எச்சரிக்கை!

முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை - அனைவருக்குமான எச்சரிக்கை!

பொது இடங்களில் முகக் கவசத்தை அணியாது, நடமாடும் நபர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மேலதிகமாக பி.சி.ஆர் அல்லது ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளை நடத்துவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களினால் கொரோனா தொற்று பரவுவதற்கான அபாயம் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.


$ads={2}

சுகாதார பிரிவின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், முகக் கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பேணாத நபர்களுக்கு எதிராக தொடர்ந்தும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பேணாத 74 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post