சுகாதார அமைச்சர் உடல் நலம் தொடர்பாக வெளியான செய்தி!

சுகாதார அமைச்சர் உடல் நலம் தொடர்பாக வெளியான செய்தி!


கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி IDH வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் தற்போது அவரது உடல் நலத்தில் எந்த குறைபாடும் இல்லை என்று சுகாதார அமைச்சின் ஊடக செயலாளர் விராஜ் அபேசிங்க தெரிவித்தார்.


கடந்த 23 ஆம் திகதி சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டது. PCR பரிசோதனைகளின் பின்னர் ஹிக்கடுவையிலுள்ள ஹோட்டலொன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த அவர் தொற்றுறுதி செய்யப்பட்டதையடுத்து கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.


எனினும், நேற்று அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சரின் நிலை குறித்து வினவிய போதே, அவரது உடல் நலம் தேறிவருவதாகவும் பாரிய பாதிப்புக்கள இல்லை என்றும் சுகாதார அமைச்சின் ஊடக செயலாளர் கூறினார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.