துறைமுகம் தொடர்பான நிலைப்பாட்டில் ஜனாதிபதி வாய் திறக்க வேண்டும்! -ஞானசார தேரர்

துறைமுகம் தொடர்பான நிலைப்பாட்டில் ஜனாதிபதி வாய் திறக்க வேண்டும்! -ஞானசார தேரர்


துறைமுகம் தொடர்பிலான நிலைப்பாட்டை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டுமே தவிர, ஒரு சில அமைச்சர்கள் வௌியிடும் கருத்துக்களை செவிமடுப்பது தேவையற்றது என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.


அஜித் நிவாட் கப்ரால், தயா ரத்நாயக்க ஆகியோர் இந்த விடயத்தில் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருவதாக தேரர் சுட்டிக்காட்டினார்.


துறைமுக விடயத்திலுள்ள நியாயத்தை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் தேரர் வலியுறுத்தினார்.


கிழக்கு முனையத்தை வழங்கினாலும் மேற்கு முனையத்தை வழங்கினாலும் இவையனைத்தும் இலங்கைக்கு உரியது என கலகொட அத்தே ஞானசார தேரர் சுட்டிக்காட்டினார்.


மஹிந்த ராஜபக்ஷவோ, கோட்டாபய ராஜபக்ஷவோ, ரணில் விக்ரமசிங்கவோ யார் வழங்கினாலும் அதில் வேறுபாடு இல்லை எனவும் தேரர் தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.