உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது - உலக சுகாதார அமைப்பு

உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது - உலக சுகாதார அமைப்பு

இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது வேகமாகப் பரவிவரும் நிலையில் குறைந்தது 60 நாடுகளில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த வைரஸ் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பை விட பத்து மடங்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு இன்று (20) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உருமாறிய வைரஸ் கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் முதன்முதலில் கண்டறியப்பட்ட நிலையில், முன்னைய கொரோனா வைரஸை விட 50 முதல் 70 வீதம் வரை அதிக வீரியத்தைக் கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


$ads={2}

இதேவேளை, கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய இறப்பு எண்ணிக்கை, தற்போது இரண்டு மில்லியனைக் கடந்துள்ள நிலையில், வைரஸின் புதிய வகைகள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள நாடுகள் தடுப்பூசிகள் பரவலாகக் கிடைக்கும் வரை நோய்த் தொற்றுகளை கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இதனிடையே, தென்னாப்பிரிக்க கண்டறியப்பட்டுள்ள உருமாறிய வைரஸ், பிரித்தானியாவைப் போலவே தீவிர பரவலைக் கொண்டுள்ள போதும் ஆபத்தானதாகத் தெரியவில்லை என உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post