18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவப் பயிற்சி; கேள்வி எழுப்பிய இம்தியாஸ் பாக்கிர் மார்க்கார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவப் பயிற்சி; கேள்வி எழுப்பிய இம்தியாஸ் பாக்கிர் மார்க்கார்!


ஒரு அமைச்சர் நாட்டிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட சகல இளைஞர்களுக்கும் இராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூறுவது ஏன் என்று பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர்  மார்க்கார் கேள்வி எழுப்பினார். 


இன்று (20) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இந்த கேள்வியினை எழுப்பினார்.


$ads={2}


நாட்டில் இளைஞர்களால் அதிக வீதி விபத்துக்கள் இடம் பெற்றால் அதற்கு ஏன் இராணுவப் பயிற்சி? என்றும் இவ்வாறு அரசாங்கம் கூறுவதால் நட்டிலுள்ள இளைஞர்களை அரசாங்கம் தரக்குறைவாகக்  கவனம் செலுத்தியுள்ளதாக என்னத் தோன்றுவதாக குறிப்பிட்ட அவர், யோசனையை முன்வைத்த அமைச்சர் இளைஞர்களுக்கு எந்த ஒழுக்கமும் இல்லை என்றால், அந்த ஒழுக்கத்தை வளர்க்க இளைஞர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறுவாராக இருப்பின், சாரணர் இயக்கம், கேடட் இயக்கம் மற்றும் பிற சங்கங்கள் உட்பட பாடசாலை கட்டமைப்பிலுள்ள  பல நடவடிக்கைகளை பலப்படுத்துவது எவ்வாறு என்று சிந்திப்பதே பொருத்தம் எனச் சுட்டிக்காட்டினார்.


மேலும் அவர் அங்குள்ள முறைமைகளில் கவனம் செலுத்துவது நல்லது என்றார். பாடசாலை கட்டமைப்பில் இருந்து ஒழுக்கமான பல இளைஞர்களை நாடு பெற்றிப்பதாக கூறிய அவர் கிரிக்கட் வீரரும் பன்முக ஆளுமையும் கொண்ட குமார் சங்கக்கார மற்றும் தறபோதைய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் இளைஞர் பிரதிநிதியாக செயற்ப்படும் ஜயத்மா விக்ரமரத்னவை உதாரணமாக குறிப்பிட்டார்.


இவ்வாறான யோசனைகளை முன்வைக்கும் போது ஏனைய அமைசர்கள் வாய் மூடி ஆமாம் ஆமாம் கூறாமல் திறனாய்வு ரீதியாக மாற்று யோசனைகளை முன்வைக்க முன்வர வேண்டும், அடிமைகள் போன்று செயற்படும் மன நிலையிலிருந்து விடுபட வேண்டும், வியத்மக அறிஞர்கள் இதில் தலையீடு செய்ய வேண்டும் என்று கோரினார்.


முன்னைய  கால இளைஞர் கமிஷன் அமைக்கப்பட்டு, இளைஞர்களுக்கு சமத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. நாட்டில் இரண்டு இளைஞர் கலவரம் வெடித்தது. ஏன் அவ்வாறு இடம் பெற்றது என்று சிந்திக்க வேண்டும். இளைஞர்களுக்கு அவர்களுக்குரிய அத்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தோடு, தேர்தல்களில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்துடன் ஒரு இளைஞர் சமூகத்தை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்வந்துருப்பதாகவும், 25 வீத ஒதுக்கீட்டைக் கோரி தனிநபர் பிரேரனை ஓன்றை தான் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக கூறினார்.இதுபோன்ற சூழ்நிலையில் இராணுவ பயிற்சிக்காக இளைஞர்களைப் பயன்படுத்துவது தவறு என்று அவர் சுட்டிக்காட்டினார்


இந்த அரசு இன்று போட்டித் தேர்வுகள் மூலம் முதலிடம் பிடித்த அரச ஊழியரை இரண்டாம் நிலைக்குத தள்ளி ஒரு இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தில் நமக்கு ஏற்படக்கூடிய கதி குறித்து கவலைப்பட வைக்க முயற்சிக்கிறது என்றும் சகல நிர்வாக நடவடிக்கைகளிலும் இராணுவத்தினரை உள்ளீரப்பது பொறுத்தமற்றது எனவும் சுட்டிக் காட்டினார்.


அரசியல் பழிவாங்கள் ஆணைக்குழு பரிந்துரை குறித்து ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், நீதித்துறை சுயாதீனமாக செயல்பட்ட சம்பவங்கள் உள்ளன என்று கூறினார்.


நாளுக்கு நாள் வேலை செய்ய வேண்டிய விஷயங்களைப் பார்ப்பதில் இழப்பு ஏற்பட்டதால் இந்த நிலைமை எழுந்துள்ளது என்றும் 20 ஆவது திருத்தம் மூலம் மூன்று அதிகார நிலைகளின் குவிப்பை ஒருவரிடம் வழங்கியதன் விளைவின் விபரீதம் என்று சுட்டிக் காட்டினார்.


முஸ்லிம்களின் தகனம் குறித்து ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக; அடக்கமா தகனமா என்பதில் ஒரு முஸ்லிமுக்கு பிரச்சினை அல்ல; விஞ்ஞான ரீதியாக நிறூபிக்கப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயார். ஆனால் இங்கு நடப்பது வேறொன்று அதைத்தான் நாங்கள் பிரச்சிணை எனகிறோம். உலகில் 192 நாடுகள் ஒரு முடிவைப் பினபற்றும் போது இலங்கை மட்டும் அதிலிருந்து விலகி செயற்படுகிறது. 


இறுதியாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட துறைசார் வைத்தியர்களின் அறிக்கையை பின்பற்றுமாறு அரசாங்கத்தை வேண்டிக் கொண்டார். இதை ஒரு முஸ்லிம்களின் பிரச்சிணையாகப் பாரப்பதையும் விடுத்து ஒரு மனித உரிமைப் பிரச்சிணையாக பார்க்கவும். இறுதி மரியாதைக்கு இடம் கொடுங்கள்; மனித விழுமியம் அற்ற ஒர் தேசமாக எமது நாட்டின் அபிமாத்தை இதன் மூலம் சிதைக்காதீர்கள்; தேசத்தின் அடையாளத்தை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் என்று சுட்டிக் காட்டினார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.