வாகன இறக்குமதி தடையால் விற்பனை நிலையங்கள் பூட்டு!

வாகன இறக்குமதி தடையால் விற்பனை நிலையங்கள் பூட்டு!


நாட்டில் வாகன இறக்குமதி தடைப்பட்டுள்ளதன் காரணமாக 70 சதவீதமான வாகன விற்பனை நிலையங்கள் தற்போதைய நிலையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் பெரும்பாலான விற்பனையாளர்கள் பெரும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இலங்கையில் வாகன விற்பனை நிலையங்களை நடத்திச் செல்லும் பெரும்பாலானோர் வங்கி கடன்கள் ஊடாகவே வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக குறித்த சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கடன் சுமையுடன் விற்பனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


தமிழன்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post