முஸ்லிம் சமூகத்தின் தொடர்பாடலில் எங்கோ ஓர் ஓட்டை இருக்கின்றது!

முஸ்லிம் சமூகத்தின் தொடர்பாடலில் எங்கோ ஓர் ஓட்டை இருக்கின்றது!

பேராசிரியரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரஞ்சித் பண்டார அவர்கள் நேற்று (21) சிரச இலட்சாதிபதி நிகழ்ச்சியின் வெற்றியாளர் சுக்ரா முனவ்வர் அவருடைய வீட்டிற்கு நேரடியாகச் சென்று தனது வாழ்த்தையும் அன்பளிப்புகளையும் வழங்கியுள்ளார்.

இவர் அவுஸ்திரேலிய குயின்ஸ்லேன்ட் பல்கலைக்கழகத்தில் கலானிதிப் பட்டத்தை பெற்றதோடு பல உயர் நிறுவனங்களின் தலைவராகவும் சேவையாற்றியவர். 

பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்று முக்கியமான குழுக்களிலும் அங்கம் வகிக்கின்றார். 

சாதாரண குடும்பத்தில் பிறந்து இறைவன் கொடுத்த அறிவாற்றலால் முஸ்லிம்கள் இனவாத நசுக்கல்களுக்கும் பழிவாங்கல்களுக்கும் உள்ளாகியிருக்கும் இந்த காலச் சூழலில் பெரும்பாண்மை சமூகத்தினை சேர்ந்த மத குருக்கள், புத்திஜீவிகள், படித்தவர்கள், அரசியல்வாதிகள், பாமரர்கள் என இலட்சக்கணக்கானவர்களின் மனங்களை ஒரு நொடியில் கவர்ந்திழுக்க முடியும் என்றால் முஸ்லிம் சமுகத்தின் தொடர்பாடலில் எங்கோ ஓர் ஓட்டை இருக்கின்றது.

$ads={2}

இன்னும் எத்தனையோ சுக்ராக்களும், சுக்ரீகளும் விளித்துக் கொள்ளாதவரை இன நல்லுறவுகளை கட்டி எழுப்புவது சவாலாகவே அமையும். 

எமது அரசியல் முன்னோர்கள் சாதித்தவைகளையும் பெற்றுத்தந்த சலுகைகளையும்தான் இன்னும் முஸ்லிம் சமூகம் அனுபவித்துக் கொண்டிருக்குன்றது. 

அதிலும் பலவற்றை இப்போது காப்பாற்றிக்கொள்ள முடியாத சுய நல அரசியல் தலைமைகளால் ஒவ்வொன்றாய் இழந்து கொண்டிருக்கின்றது.

சமூகத்திற்காக மாத்திரம் என்ற எண்ணத்தில் இஹ்லாசாக அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக மாத்திரம் செயற்பட்டிருந்தால் எந்தக் காரியத்திலும் இறைவனுன் உதவி இருந்துருக்கும். 

நமது சமூகம் இன்னும் கற்றுக்கொண்டே இருக்கின்றது ஆனால் கற்ற பாடங்களை செயற்படுத்தாது அவ்வப்போது சோடா போத்தல்களாக சீறிப் பாய்ந்துவிட்டு விழுந்த குழியில் மீண்டும் விழுந்துகொண்டே இருக்கின்றது. 

தமிழில்: சிப்லி பாரூக் மொஹமெட்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post