தனது திருமணத்திற்கு மின்குமிழ் பொருத்தச்சென்ற பட்டதாரி மணமகன் பரிதாப பலி!

தனது திருமணத்திற்கு மின்குமிழ் பொருத்தச்சென்ற பட்டதாரி மணமகன் பரிதாப பலி!


கேகாலை பிரதேசத்தில் சுப முகூர்த்தத்தில் இன்றைய தினம் (14) திருமணம் செய்யவிருந்த இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


குறித்த இளைஞன் திருமணத்திற்காக ஏற்பாடு செய்திருந்த திருமண மண்டபத்தில் மின்குமிழ் பொருத்துவதற்காக சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.


$ads={2}


உயிரிழந்தவர் கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய பட்டதாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மின்சாரம் தாக்கிய குறித்த நபர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டம் நிறைவு செய்தவர் மாலைதீவில் 06 மாதம் பணியாற்றிய பின்னர் இலங்கை வந்து கொழும்பு தனியார் நிறுவனத்தில் தொழில் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இவர் கேகாலை மாவட்டத்தில் ஆறாவது இடம்பெற்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு சென்று பட்டம் பெற்ற ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post