துறைமுக அதிகார சபையை அடிப்படையாக வைத்து ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது!

துறைமுக அதிகார சபையை அடிப்படையாக வைத்து ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது!


இலங்கை துறைமுக அதிகார சபையின் அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின்பேரில், ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன. இந்நிலையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தொழிற்சங்கங்கள் தயாராகிவருகின்றன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மேற்படி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.