
தைப்பொங்கல் கொண்டாட்ட நிகழ்வுகளை குடும்பத்தினருடன் மட்டுப்படுத்துமாறு பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை நாளையதினம் விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
$ads={2}
இதற்கென விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ள சில பகுதிகளில் பொதுமக்கள் சிலர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை தவிர்த்து செயற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக புதிய கொத்தணிகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.