ஊடகங்களுக்காக வேண்டியே எனது மனைவி தம்மிக்க பாணி அருந்தினார்! -பவித்ராவின் கணவர்

ஊடகங்களுக்காக வேண்டியே எனது மனைவி தம்மிக்க பாணி அருந்தினார்! -பவித்ராவின் கணவர்


கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, தம்மிக பாணியை ஒரு தடவை மாத்திரமே பருகியதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கணவரும் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் தவிசாளருமான காஞ்சன ஜயரத்ன சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு காட்டுவதற்காகவே,  சுகாதார அமைச்சர் ஒரு தேக்கரண்டி பாணியை பகிரங்கமாக அருந்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அத்துடன் சுகாதார அமைச்சருக்கு எங்கிருந்து தொற்றியது குறித்து எமக்கும் தெரியாதென தெரிவித்துள்ள அவர், கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டத்துக்காக சுகாதார அதிகாரிகளுடனும் வெவ்வேறு நபர்களுடனும் இணைந்து அவர் பணியாற்றியதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ராவின் கணவர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post