24 வயது நபரின் மீட்டியாகொட கொலை விவகாரம்; நால்வர் கைது!

24 வயது நபரின் மீட்டியாகொட கொலை விவகாரம்; நால்வர் கைது!


காலி - மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற 24 வயதான ஒருவரின் கொலையுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்கள் வருகை தந்த 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் வாள் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.


சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மீட்டியாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post