குருநாகல் - இப்பாகமுவ பகுதி இளம் கண்டுபிடிப்பாளர் சகீ லதீப் வரலாற்றுச் சாதனை!

குருநாகல் - இப்பாகமுவ பகுதி இளம் கண்டுபிடிப்பாளர் சகீ லதீப் வரலாற்றுச் சாதனை!


iCAN 2020 - கனடாவில் சர்வதேச புத்தாக்க போட்டியில் இலங்கையின் சகீ லதீப் உயர் விருதான முதல் 10 சிறந்த புத்தாக்க விருதுடன் தங்க பதக்கம் மற்றும் விஷேட விருது வென்று சாதனை படைத்துள்ளார்.


International Invention & Innovation Competition In Canada - 2020இல் எம். டீ. எம். சகீ லதீப் இன் Arogya Herbal சர்ம நோய்களுக்கு சிகிற்சை (Paste to Treat for Skin Diseases) எனும் புத்தாக்கத்திற்கு 60கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளில் இருந்து 600கும் மேற்பட்ட புத்தாக்கங்களில் உயர்ந்த விருதான முதல் 10 சிறந்த கண்டுபிடிப்பு விருது மற்றும் தங்க பதக்கம், விசேட விருது, முதலான 3 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.


இப்போட்டியில் இலங்கையில் இருந்து பங்குபற்றியவர்களில் உயர்ந்த சிறந்த புத்தாக்கம் 10 விருதினை இலங்கை நாட்டிற்கு சகீ லதீபினால் பெற முடிந்தமை குறிப்பிடதக்கது.


இலங்கையில் கண்டுபிடிப்பு ஒன்றிற்கு வழங்கும் மிக உயர்ந்த விருதான இலங்கை ஜனாதிபதி விருது பாரம்பரிய மருத்துவ துறையில் 1ஆம் இடம் மற்றும் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருதையும்  பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


கனடாவில் சர்வதேச புத்தாக்க போட்டி - 2020 விருது வழங்கும் விழா கௌரவ இராஜாங்க அமைச்சர் Dr. சீதா அரம்பேபொல (திறன் அபிவிருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமச்சரின் தலைமையில் கடந்த 2021.01.26 அன்று இலங்கை புத்தாக்க ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.


Arogya Herbal Total Skin Paste எனும் வியாபார நாமத்தை கொண்ட இந்த மருத்துவ பசையானது ஆயுர்வேத, சித்த மற்றும் யூனானி மருத்துவ முறைபடி இயற்கை மூலிகை மூலகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 


இது சொறி, சிறங்கு, சோரியாசிஸ், எக்சிமா, முகப்பரு, தழும்பு, கால் வெடிப்பு முதலான சர்ம நோய்களை வெளி பூச்சின் மூலம் குணப்படுத்த மிக சிறந் பசையாகும்.


உயர்தர மாணவர் ஒருவரின் தனியார் செயற்திட்டம் இன்று மிக பெறிய வியாபாரக உருவாகி உள்ளது.


கொழும்பு பல்கலைகழகம் மருத்துவ ஆய்வுகளில் வெற்றிகண்டு ஆயுர்வேத திணைக்களத்தினால் அனுமதி பெற்று, 2013 ஆம் ஆண்டில் இலங்கை புத்தாக்க கண்காட்சியில் பங்குபற்றி அதன் மூலம் சர்வதேச முதலீட்டாளர்களின் வியாபார நிதி வழங்கும் போட்டியில் 12 மில்லியன் முதலீடு பெற்று 2014அம் ஆண்டில் Zacki Herbal Production (Pvt) Ltd என நிறுவனம் ஆரம்பித்து ஆயுர்வேத மருந்து தயாரித்து வினியோகிப்பதுடன் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் மூலம் SKIN CLINIC இல் சர்ம நோயால் அவதிப்படுபவர்களை நேரடியாகவோ ஒன்லைன் மூலமாகவோ பரிசோதித்து சிகிச்சையளிப்பதுடன் இலவச மருத்துவ ஆலோசனை வழங்குவதுடன் Cash On Delivery சேவையை வழங்குகின்றது.


Arogya Herbal Total Skin Paste இற்கு கிடைத்துள்ள அங்கீகாரங்கள் பின்வருமாறு,


# ஆயுர்வேத மருந்துக்கான அனுமதி - ஆயுர்வேத திணைக்களம்


# ஆயுர்வேத மருத்துவ தயாரிப்பகத்துக்கான அனுமதி - ஆயுர்வேத திணைக்களம்


# 2018 - இலங்கை ஜனாதிபதி விருது (பாரம்பரிய மருத்துவத்தில் 1ஆம் இடம் மற்றும் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது) 


# ITI Test Reports 


# மருத்துவ ஆராய்ச்சி - கொழும்பு பல்கலைகழகம் 


# Zacki Herbal Products (PVT) Ltd . நிறுவன பதிவு


# ஏற்றுமதி பதிவு - இலங்கை ஏற்றுமதிகள் ஆபிவிருத்தி சபை


# Patent, Trade Mark பதிவு - இலங்கை புலமை சொத்து அலுவலகம்


# கீர்த்தி ஶ்ரீ தேச சக்தி, ஆயுர் வித்யா கீர்த்தி மற்றும ஆயுர் வித்யா பிரசாதி வித்யாபிமானி விருதுகள்.


-எம்.ரீ. ஹைதர் அலிகருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.