WATCH: 64 வயது பெண்ணொருவர் 18 வயது வாலிபரால் குத்திக்கொலை! மாவனெல்லையில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: 64 வயது பெண்ணொருவர் 18 வயது வாலிபரால் குத்திக்கொலை! மாவனெல்லையில் சம்பவம்!


மாவனெல்லை பகுதியில் 64 வயதான பெண் ஒருவரை 18 வயதுடைய இளைஞன் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


குறித்த பெண் தனது வீட்டில் தமது உறவினர்களுடன் இருந்த சந்தர்ப்பத்தில், குறித்த இளைஞன் திடீரென வந்து பெண்ணின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.


தனிப்பட்ட தகராறு காரணமாகவே, குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.


சம்பவத்தில் மற்றுமொரு பெண் காயமடைந்து, மாவனெல்லை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


குறித்த சந்தேகநபர் தொடர்ச்சியாக தமது குடும்பத்திற்கு இடையூறுகளை விளைத்திருந்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த முறைப்பாட்டை அடுத்து, மாவனெல்லை பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்துள்ளதுடன், இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இதேவேளை, குறித்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவில் பதிவாகி உள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.