இங்கிலாந்து கிரிக்கட் வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் இருவருக்கு கொரோனா!!!

இங்கிலாந்து கிரிக்கட் வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் இருவருக்கு கொரோனா!!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் தங்கியுள்ள ஹோட்டல் ஒன்றின் இரு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

காலி, டடெல்ல பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் இன்று (15) உறுதிப்படுத்தியுள்ளது.

$ads={2}

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட்போட்டிகளின் போது இங்கிலாந்து கிரிக்கெட்அணி வீரர்கள் இந்த ஹோட்டலில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹோட்டலின் சமையலறையில் பணிபுரியும் குறித்த இரு பணியாளர்களும் ரத்கம, வெலிகமவைச் சேர்ந்தவர்கள் என்றும் இன்று இவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post