இன்று வெளியான அறிக்கை முற்றிலும் போலியானது; பிரதமர் அலுவலகம் விளக்கம்!

இன்று வெளியான அறிக்கை முற்றிலும் போலியானது; பிரதமர் அலுவலகம் விளக்கம்!


கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரியைகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட இரண்டு குழுவினர் தங்களின் ஆய்வு அறிக்கைகளைப் பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளனர்.


ஆனால் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் இதுவரையில் தெளிவுபடுத்தப்படவில்லை.


ஆகவே கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்யலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானது என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.


$ads={2}


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்பது தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சினால் 11 பேர் அடங்கிய விசேட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டது. அத்துடன் மருத்துவ தரப்பினராலும் பிறிதொரு குழு நியமிக்கப்பட்டது.


இவ்விரு குழுவின் அறிக்கைகள் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து இதுவரையில் கவனம் செலுத்தப்படவில்லை.


சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானவை வெகுவிரைவில் அறிக்கையின் உண்மை தன்மை பகிரங்கப்படுத்தப்படும் என பிரதமரின் ஊடகச் செயலாளர் குறிப்பிட்டார்.


-இராஜதுரை ஹஷான்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post