இலங்கையில் சர்வதேசத்துக்கு சமாந்தரமாக கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு!! சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

இலங்கையில் சர்வதேசத்துக்கு சமாந்தரமாக கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு!! சுகாதார அமைச்சு தெரிவிப்பு!


உலகிலுள்ள மொத்த சனத்தொகையில் ஒவ்வொரு மில்லியனுக்கும் 522 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, 09 பேர் உயிரிழந்துள்ளனர். 


இதே போன்று சர்வதேசத்துக்கும் சமாந்தரமாக இலங்கையிலும் ஒவ்வொரு மில்லியனுக்கும் 09 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.


$ads={2}


கொழும்பில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,


உலகிலுள்ள சனத்தொகையில் ஒவ்வொரு மில்லியனுக்கும் 522 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தென் ஆசிய வலயத்தில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாகும். அதாவது ஒவ்வொரு மில்லியனுக்கும் 5,859 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.


இலங்கையில் ஒவ்வொரு மில்லியனுக்கும் 1,886 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

அதே போன்று உலகலாவிய ரீதியில் சனத்தொகையில் ஒவ்வொரு மில்லியனுக்கும் 9 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். 


அதே போன்று தெற்காசிய வலயத்தில் மொத்த சனத்தொகையின் ஒவ்வொரு மில்லியனுக்கும் 89 பேர் உயிரிழக்கின்றனர். இது மிகவும் உயர்ந்த எண்ணிக்கையாகும். இலங்கையிலும் சர்வதேசத்துக்கு சமாந்தரமாக ஒவ்வொரு மில்லியனுக்கும் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.


-எம்.மனோசித்ரா


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post