புத்தாண்டில் மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஆர்ப்பாட்டம்!

புத்தாண்டில் மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஆர்ப்பாட்டம்!


கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை தகனம் செய்யாமல் அடக்கம் செய்ய அரசாங்கத்தின் அனுமதி கோரி நேற்று மன்னாரில் அமைதியான ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.


மன்னார் மாவட்ட செயலகம் முன் ஆர்ப்பாட்டத்தை  தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவுடன் மன்னார் குடிமக்கள் குழு மற்றும் பெண்கள் சிவில் அமைப்புகளின் கூட்டணி போன்றன ஏற்பாடு செய்திருந்தன.


$ads={2}


'முஸ்லிகளின் இஸ்லாமிய மதத்தில் உயிரிழக்கும் எவரையும் தகனம் செய்யாததால், கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்வது அந்த மதத்தின் கொள்கைகளுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு உடல்களை தகனம் செய்யாமல் அடக்கம் செய்ய அரசு இப்புத்தாண்டில் அவர்களது மனதை நோகடிக்காமல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என குறித்த ஆர்ப்பாட்டத்தில் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டிருந்தது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post