பிசீஆர் செய்யாது தலைமறைவாகும் பாராளுமன்ற உறுப்பினர்கள் - அட்டுலுகமை போல் மாறிய பாராளுமன்றம்!!

பிசீஆர் செய்யாது தலைமறைவாகும் பாராளுமன்ற உறுப்பினர்கள் - அட்டுலுகமை போல் மாறிய பாராளுமன்றம்!!

கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளீரா என்பது குறித்த பி.சி.ஆர். பரிசோதனையை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினருக்கு  சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் இதுவரை நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனகிகளில் சுமார் 90 அரச மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அண்மையில் பாராளுமன்றத்தில் நான்கு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, பாராளுமன்றத்தில் பி.சி.ஆர் சோதனைகளை நடத்த முடிவு செய்யப்பட்டது.
 இன்று (27) 07 ஆவது பாராளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதன் காரணமாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பி.சி.ஆர் பரிசோதனையை செய்யுமாறு சபாநாயகர் கோரியுள்ளார். இருப்பினும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களில் மிகக்குறைவான எண்ணிகையிலேயே பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதாக வட்டாரங்கள் கூறுகின்றன.


$ads={2}

கொரோனா தொற்றுக்குள்ளான பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புடைய பல பாராளுமன்ற உறுப்புனர்கள் தான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அஞ்சி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது, ​​கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை அளித்து, அத்தியாவசிய அமைச்சரவை ஆவணங்கள் மட்டுமே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன.


சபாநாயகர் பொது இடங்களுக்கு செல்வதை தடைசெய்ததுடன், மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் பொது விழாக்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். கொரோனா வைரஸ் பரவுவதால் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே பாராளுமன்றம் கூடுகிறது.


மேலும், இதுவரை ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பாராளுமன்ற உறுப்பினர்களான தயசிறி ஜெயசேகர, ரவூப்ஃ ஹக்கீம் மற்றும் வாசுதேவ நானாயக்கார ஆகியோர் முழுமையாக குணமடைந்து சிகிச்சை மையங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

-லங்காதீப

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post