கொரோனா தொற்றுக்கு எதிராக ஔடதம் தயாரித்த தம்மிக பண்டார கைது செய்யப்படவுள்ளாரா?

கொரோனா தொற்றுக்கு எதிராக ஔடதம் தயாரித்த தம்மிக பண்டார கைது செய்யப்படவுள்ளாரா?

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஔடதத்தை தயாரித்த கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து, இவருக்கு எதிராக கேகாலை சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


$ads={2}

இவ்விசாரணைகளின் பின் தம்மிக்க பண்டார அநேகமாக கைதாவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தம்மிக்க பண்டாரவால் தயாாிக்கப்பட்ட ஔடதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக சென்ற சிலருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறு இருப்பினும் இன்றைய தினமும் அநேகமான மக்கள் இவரின் ஔடதத்தை கொள்வனவு செய்வதற்காக இவரது வீட்டின் முன் கூடியிருப்பதாகவும் தொிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post