கம்பளையில் காணாமல் போன தங்கவேல் தேவகுமார் எனும் நபர் சடலமாக மீட்பு!

கம்பளையில் காணாமல் போன தங்கவேல் தேவகுமார் எனும் நபர் சடலமாக மீட்பு!


கண்டி - கம்பளை புகையிரத நுழைவாயில் அருகிலுள்ள ஆற்றிலிருந்து சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர் நபர் 60 வயதுடைய ஆண் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


$ads={2}


மேலும் அண்மையில் கம்பளை, கங்கவட்டகொரலே பகுதியில் காணாமல் போனவாராக இருக்கலாம் என சந்தேகித்து காணாமல் போனவரின் இரண்டு பிள்ளைகள் அவ்விடத்திற்கு வந்து சடலத்தை அடையாளம் கண்டுள்ளனர். 


இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும், காணாமல் போன நபர், 18/4 கங்காவத்தை வீதி, கம்பளை எனும் விலாசத்தில் வசித்து வந்த தங்கவேல் தேவகுமார் எனும் கடந்த நான்கு நாட்களாக காணாமல் போய் தேடப்பட்டு வந்த நபர் ஆவார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post