கடுமையான சொற்பதங்களுடன் மைத்திரிக்கு கடிதம் அனுப்பிய சந்திரிகா!

கடுமையான சொற்பதங்களுடன் மைத்திரிக்கு கடிதம் அனுப்பிய சந்திரிகா!


சந்திரிகா குமாரதுங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடுமையான சொற்பதங்களுடன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்தியாவின் இந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பிலேயே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

$ads={2}

குறித்த செவ்வியில் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் இல்லை என்று மைத்திரிபால சிறிசேன ஒரு அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளதாக சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற பொய்யைக் கூறுவது முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் தகுதியின்மையை காட்டுகிறது.

அத்துடன் கட்சியின் யாப்பை அறியாமை காரணமாகவே மைத்திரிபால சிறிசேன இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாக சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ‘ஐயா’ என்று மைத்திரிபால சிறிசேன அழைத்ததாகவும் எனினும் தாம் அந்த நிலைக்கு இறங்கிக் செல்லவில்லை என்றும் சந்திரிக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post